குன்னூர்: உதகையை போல எனது மனமும் குளிர்ச்சியாக உள்ளது என உதகையின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த “ஜான் சல்லிவன்” அவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள மார்பளவு வெண்கலச் சிலையினை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற  உதகையின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு,  ரூ.34 கோடி ரூபாய் மதிப்பில் 20 புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைத்துள்ளார். ரூ.28 கோடி மதிப்பீட்டில் 9,422 பயனாளிகளுக்கு நல திட்ட  வழங்கினார்.

அதன்பின் இந்த நிகழ்வில் பேசிய அவர், முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஊட்டி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இயற்கை எழில் கொஞ்சும் உதகை பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது. உதகையை போல எனது மனமும் குளிர்ச்சியாக உள்ளது. உதகை மக்கள் அளித்த வரவேற்பு எண்னை ஊக்கப்படுத்தி யிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக  உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த “ஜான் சல்லிவன்”  மார்பளவு வெண்கலச் சிலையினை திறந்து வைக்க வருகை மந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நகராட்சி கமிஷனர்  காந்திராஜன் உள்பட அதிகாரிகள், கட்சியினர் வரவேற்றனர்.