சென்னை:

தமிழ் திரைப்பட இயக்குவர் முக்தா சீனிவாசன் சென்னையில் காலமானார். 1929ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பிறந்த இவர் 65 படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர், தயாரிப்பாளர், கதை வசன கர்த்தா என பல அவதாரங்களை எடுத்தவர்.

 

ஜெயலலிதாவின் 100வது திரைப்படமான சூரியகாந்தி என்ற திரைப்படத்தை இவர் இயக்கினார். இவர் இயக்குனர் மட்டுமின்றி சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவரது மனைவி பிரேமா சீனிவாசன். முக்தா எஸ்.சுந்தர், மாயா சீனிவாசன், சுந்தர் சீனிவாசன், ரவி சீனிவாசன் ஆகிய 4 பிள்ளைகள் உள்ளனர். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.