டெல்லி: இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது.

பிரமோஸ் என்பது ஒரு மீயொலிவேக சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை.  இந்த ஏவுகணைகளை இந்திய அரசு தயாரித்து வருகிறது. இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. இதில் அவ்வப்போது மேலும் பல வசதிகளுடன் கூடிய ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிதாக மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணையை  வங்காள விரிகுடா கடலில் இருந்து,  போர்க்கப்பல் மூலம் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கூறிய பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்டின் உயர் அதிகாரி , சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைகள், இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியானது நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் அல்லது தரை தளங்களில் இருந்து 2.8 மாக் வேகத்தில் அல்லது ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் ஏவக்கூடிய சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்குகிறது.

இந்தியா பல்வேறு நாடுகளுக்கு  பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.