டெல்லி: பாஜகவுக்கு எதிரான கூட்டணி கட்சிகளின் அமைப்பான இண்டியா கூட்டணி கூட்டம் இன்று பிற்பகல் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
இதற்காகமுதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலையே சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். தற்போது டெல்லியில் உள்ள முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து இன்று மாலை தொடங்கும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ஏற்கனவே இந்த ஆலோசனை கூட்டம் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற உள்ளது.
இதில், காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கெஜ்ரிவால், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சஸ்பெண்ட், லோக்சபா தேர்தலுக்கான வியூகம், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே இண்டியா கூட்டணி 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது. அதேபோல் 19 பேர் கொண்ட பிரச்சாரக் குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.