சென்னை: தென் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.பல இடங்களல் வெள்ளத்தில் தண்டவாளங்கள் சேதமடைந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால் கடந்த இரு நாட்களாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்  தென்மாவட்ட ரயில்கள்   இன்று  மதுரையில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து இயக்கப்படும் 9 ரயில்களின் விவரம்:

1. 22667 நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயில்
2. 12634 கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில்
3. 22658 நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு ரயில்
4. 17236 நாகர்கோவில் – எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில்
5. 11022 திருநெல்வேலி – தாதர் விரைவு ரயில்
6. 16235 தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில்
7. 20606 திருச்செந்தூர் – மைசூர் அதிவிரைவு ரயில்
8. 12632 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில்
9. 12694 தூத்துக்குடி – சென்னை எழும்பூர் விரைவு ரயில்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.