ஸ்டெம் செல்கள் மூலம் மனித இதயம் சாத்தியம்

Must read

தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு அளித்துள்ள தரவுகளின் படி, இரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஏறத்தாழ 300 இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது.

ஆனால் வரும் காலங்களில்  இந்தியாவில் 50,000 பேர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் , ஆனால் அதற்கான விழிப்புணர்வு இந்தியாவில் அதிகமாக இல்லை எனவும் அதற்காக நாடு முழுதும்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது

இதனடிப்படையில்  journal Circulation Research ஆய்வு நிறுவனத்தின்  ஆய்வாளர்கள் ஸ்டெம் செல் மூலம் மனித இதயத்தினை வளர்த்திட முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் 3டி முறையில் 3டி இதயங்களை உருவாக்கும் சூழ்நிலை இருந்தது வந்தது. ஆனால்  Massachusetts General Hospital and Harvard Medical School  இணைந்து நடத்திய ஆய்வில் ஸ்டெம் செல்களை கொண்டே இதயத்தினை வளர்த்திட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்

இதுவரை வந்த ஸ்டெம்செல் ஆய்வு முடிவுகள் நம்மிடையே சிறந்த முடிவுகளை கொடுத்துள்ள தால் ஸ்டெம் செல் மூலம் இதய வளர்ப்பும் நிச்சயம் சாத்தியம் என்றே ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன

இது தொடர்பான ஆய்வில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படாத இதங்களை ஊட்டச்சத்து கரைசலில் வைத்து  தேவையற்ற செல்களை நீக்கி  இரத்த குழாய்களுடன் இணைக்கப்பட்டது.

அதன்பின்  ஆராய்ச்சியாளர்கள் மனித தோல் செல்களை Pluripotent( குருத்தணு செல்கள் ) ஸ்டெம்ஸ் செல்களாக மாற்றினர், பின்னர் அவை இதய செல்கள் ஆக தூண்டப்பட்டன. ஊட்டச்சத்து கரைசலில் ஊறும்போது இந்த செல்கள் நன்றாக வளர்ந்தபின இரண்டு வாரத்தில், செல்கள் முதிர்ச்சியற்ற இதயங்களின் ஒரு பகுதியாக இருந்தன. ஆராய்ச்சியாளர்கள் மின்தூண்டல் மூலம் அந்த இதயத்தினை தூண்டும்போது, இதயங்கள் துடிக்கத் தொடங்கின.

தோல் செல்கள் ஒரே உடலில் இருந்து பெறப்பட வேண்டும். இதில் குறிப்பிடத்தக்கதாக கருத வேண்டியது ஒரு புதிய இதயத்தை வளர்ப்பதற்கு பல்லாயிரக்கணக்கான பில்லியன்  இதய செல்கள் தேவைப்படுகின்றன, இதனால் ஆராய்ச்சியாளர்கள் மேலும் 500 மில்லியன் இதய செல்களை உருவாக்கியுள்ளனர்

இதுவரை ஆய்வாளர்கள் பல தொழில்நுட்பங்களை கொண்டுவந்தாலும் ஸ்டெம் செல் முறை நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதன் மூலம் இதயத்தினை மாற்றி மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்கமுடியும் என்றும் ஆய்வாளர்கள் உறுதியுடன் கூறுகின்றனர்

-செல்வமுரளி

More articles

Latest article