பே வாட்ச் படத்துக்கு  இந்தியாவில்  A சர்டிபிகேட்  அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தை தடை செய்ய சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.

மேலும் இப்படத்தை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திரையரங்குகளில் சென்று பார்க காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள பே வாட்ச் படத்துக்கு தடை விதிக்ககோரி  வைகுந்த் கஸ்தூரிரங்கன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த படத்தில் ‘‘டுவைன் ஜான்சன், பிரியங்கா சோப்ரா நடித்துள்ளனர். இந்த  ‘பே வாட்ச்’ படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றி தழ் அளித்துள்ளது. ஆனால் இந்த படத்துக்கான போஸ்டர் களில் ‘ஏ’ சான்றுக்கான முத்திரை இல்லை.

படத்துக்கான  ‘ஏ’ சான்றிதழை மறைத்து இந்த படம் திரையிடப்படுவதால் 18 வயதுக்கு கீ்ழ் உள்ளவர்கள் இந்தப் படத்தை பார்க்கக்கூடும். எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண் டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு அவசர வழக்காக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்கு அடையாள மாகத்தான் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது.

ஆனால் இது பட போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களில் குறிப்பிடப்படாததால் சிறுவர் கள் முதல் அனைவரும் இப் படத்தைப் பார்க்க நேரிடும். வார இறுதி என்பதால் திரையரங்குகளுக்கு கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ‘ஏ’ சான்றிதழை மறைத்துள்ளனர்” என்றார்.

ஆனால்,  இணையதளம் மூலமாக இப்படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அதில் ‘ஏ’ முத்திரை இடம் பெற்றுள்ளது என அரசு வழக்கறிஞர் எம்.கே. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஏ சான்றிதழ் பெற்ற படத்தை 18 வயதுக்கும் குறைவானவர்கள் பார்ப் பதைத் தடுக்கும் கடமை அரசுக்கு உள்ளது.

எனவே இப்படத்தை 18 வயதுக்கும் குறைவானவர்கள் திரை யரங்குகளுக்கு சென்று பார்க்காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு , இப்படத்துக்கு தடை விதிக்க மறுத்து வழக்கை முடித்து வைத்தனர்.