டில்லி,

டந்த ஒரு மாதமாக டில்லி திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ள டிடிவி தினகரன், என்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது.

என்னை நீக்கும் அதிகாரம் சிறையில் இருக்கும்  கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கே உள்ளது என்று அதிரடியாக கூறி உள்ளார்.

இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் உள்குத்து ஆரம்பமாகி, பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

 

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. இதன் காரணமாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னம் இரட்டைஇலை தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்க வலியுறுத்தி, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு சுமார் 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டில்லியில்  கைது செய்யப்பட்ட தரகர் சுகேஷ்சந்திரா என்பவர் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர்  டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவருக்கு டில்லி திஸ் ஹிசாரி நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து  நேற்று இரவு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

டில்லி விமான நிலையத்தில் மனைவி, மகளுடன் புறப்பட்ட தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிமுகவில் தான் தொடர்ந்து நீடித்து வருகிறேன் என்றும், எனது துணை பொதுச்செயலாளர் பதவியை யாரும் பறிக்க முடியாது. அதை நீக்கும் அதிகாரம், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது என்றார்.

தான் சென்னை சென்றதும் மீண்டும் கட்சி பணியாற்றுவேன் என்றும் அதிரடியாக கூறி உள்ளார்.

டிடிவி தினகரனின் இந்த அறிவிப்பு அதிமுக அம்மா கட்சியினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே எடப்பாடி அணி, ஜெயக்குமார் அணி என பல அணிகள் செயல்பட்டு வரும் நிலையில், நேற்று பேட்டியின்போது அமைச்சர் ஜெயக்குமார்,

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வரும் செய்திக்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது என அதிரடியாக அறிவித்த நிலையில், டிடிவி தினகரனின் இன்றைய பேச்சு அமைச்சர்களிடையே மீண்டும்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.