சென்னை: இந்தியாவில் 2021 பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் 1,33,026 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியைவிட 18% கூடுதல் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல்.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், பிப்ரவரியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்றும், கடந்த ஜனவரி மாத வசூலுடன் ஒப்பிடுகையில், 5.6 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதே வேளையில், கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயை விட 18% அதிகமாகவும், 2020 -ஆம் பிப்ரவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயை விட 26% அதிகமாகவும் உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் இன்று (மார்ச் 1ந்தேதி) வெளியிட்ட தரவுகளின்படி, மத்திய ஜிஎஸ்டியின் மொத்தத் தொகை ரூ.24,435 கோடி, இதில், மாநில ஜிஎஸ்டி ரூ.30,779 கோடி, ஜிஎஸ்டி ஆக ரூ.67,471 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ. 33,837 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.10,340 கோடியும் ( பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 638 கோடியும் உட்பட) வசூலாகி உள்ளது.
செஸ் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூல் இந்த ஆண்டு பிப்ரவரியில் செஸ் மூலம் 10,340 கோடிகளை (பொருட்களின் இறக்குமதி மூலம் ரூ. 638 கோடி வசூல் உட்பட) அரசு வசூலித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதல் முறையாக ரூ.10,000 கோடிக்கு மேல் செஸ் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.