உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் நவீன் பலி : இந்திய வெளியுறவுத் துறை

Must read

உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் நவீன் பலி : இந்திய வெளியுறவுத் துறை

கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயில் நிலையம் சென்ற போது நடந்த குண்டுவீச்சில் உயிரிழந்தார்.

இதனை இந்திய வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைனில் கார்கிவ் நகரில் இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். கர்நாடகாவை சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவன் நவீன், சூப்பர் மார்க்கெட் முன் ரஷ்ய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது நண்பர் ராபின் கூறுகையில், “நவீன் வெளியே சென்று மற்ற மாணவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்க உதவுவார். நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம்.” இந்த செய்தியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

More articles

Latest article