தூத்துக்குடி:
கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதையுமே உலுக்கிய இந்த மனிதாபிமானமற்ற துப்பாக்கி சூடுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது தூத்துக்குடி பகுதியில் இயல்புநிலை திரும்பி வருகிறது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை நேற்று துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் அமைச்சர்கள் சென்று ஆறுதல் கூறிய நிலையில், இன்று கவர்னர் பன்வாரிலால் தூத்துக்குடி சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.
இன்று காலை, தூத்துக்குடி விமான நிலையம் வந்த ஆளுநர், அங்கு மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி, எஸ்.பி முரளி ரம்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
அதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தவர், அங்கு காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், கார் மூலம் கூட்டாம்புலி சென்ற ஆளுனர் பன்வாரிலால் துப்பாக்கிச் சூட்டில் பலியான செல்வசேகர் என்பவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் ஒருசில துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்ததார்.
ஆளுநர் தூத்துக்குடி விசிட் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.