ரூ 4.2 லட்சம் கோடி கடன் வாங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்தியஅரசு மற்றொரு புறம் பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்ததுடன், வரி சுமத்துவதற்கு பதிலாக, “மத்திய அரசு தனது நிதிப்பாற்றுக்குறையை குறைக்கக் கடன் வாங்க வேண்டும். கரோனா வைரஸால் லாக்டவுனில் பொருளாதாரம் சரிந்து கிடக்கும் இந்த சூழலில் அதிகமான வரிகளை விதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், மத்தியஅரசு தற்போது கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இதை வரவேற்று ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில், பல புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர்களின் அறிவுறுத்தலை எதிரொலிக்கும் வகையில், காங்கிரசும் நானும் மத்திய அரசிடம், வரி விதிப்பை குறைத்து 2020-21ல் மேலும் கடன் வாங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஆனார், எங்கள் முறையீடுகளை எதிர்த்த மத்திய அரசு, பின்னர் அதை ஏற்றுக்கொண்டுள்ளது, CEA இன் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
திட்டமிடப்பட்ட நிதிப் பற்றாக்குறையை 5.38 சதவீதமாகக் கொண்டு கூடுதலாக ரூ .4.2 லட்சம் கோடி கடன் வாங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மத்தியஅரசின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கவும் பொருளாதாரத்தை மீண்டும் தொடங்கவும் இந்த தொகை பயன்படுத்தப்படாவிட்டால் அதிக கடன் வாங்குவது போதாது, 2020-21க்கான திருத்தப்பட்ட செலவு பட்ஜெட்டை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.