ஐக்கியஅரபு நாடுகளில் இருந்து 3குழந்தைகள் உள்பட 356 பேர் சென்னை திரும்பினர்…

Must read

சென்னை:

கொரோனா ஊரடங்கால் ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கி தவிரத்தவர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.  நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிய 2 விமானம் முலம், 3 குழந்தைகள் உட்பட 356 இந்தியர்கள் சென்னை வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும்படி  வந்தே பாரத் மிஷன் என்ற பெயரில் ஏர் இந்தியா மூலம் இந்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை அழைத்துவர 2 சிறப்பு விமானங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.  அந்த விமானங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
விமானத்தில் வந்த அனைத்து  பயணிகளுக்கும் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.  அதைத் தொடர்ந்து, மீட்டு அழைத்து வரப்பட்டவர்கள் அனைவரும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அரசின் இலவச தனிமைப்படுத்தல் மையத்திலும் இருக்கலாம் அல்லது பணம் கொடுத்து விடுதிகளிலும் தங்கிகொள்ளலாம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை வெளியரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவிலும் உறுதி படுத்தி யுள்ளார்.
மேலும்  இந்தியா திரும்பி வருவதற்கு 6,500 கர்ப்பிணி பெண்கள் உட்பட 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

More articles

Latest article