சென்னை:
மிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை பூர்விகமாகக் கொண்ட இவர், ரயில்வே டி.ஜி.பி.யாக தற்போது பொறுப்பில் இருக்கிறார்..

இதே டிஜிபி பொறுப்புக்கு தகுதிசால் ஐபிஎஸ் அதிகாரிகளாக சிலர் பட்டியலில் உள்ளனர். தீ அவிப்பு மற்றும் மீட்புப் படை டிஜிபியாக உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கரன்சின்ஹா, எல்லை பாதுகாப்புப் படை (மத்திய அரசுப்பணி) டிஜிபியாக உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் அரோரா, சிறைத்துறை டிஜிபியாக உள்ள பீஹாரைச் சேர்ந்த சுனில்குமார் சிங், அதே பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவரும் சிபிசிஐடி டிஜிபியுமான முஹம்மது ஷஹில் அக்தர் மற்றும் லஞ்ச ஒழிப்பு (ம) ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபியுமான கந்தசாமி ஆகியோர் காவல் தலைமை இயக்குநர், தமிழ்நாடு பொறுப்பிற்கு தகுதிசால் ஐபிஎஸ்களாக வரிசையில் உள்ளனர்.

மேற் குறிப்பிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளில் வயதில் இளையவர் சஞ்சய் அரோரா மட்டுமே. 2025- ம் ஆண்டு வரை அவர் காவல்துறை பணியில் இருப்பார். லஞ்ச ஒழிப்புக்கும் சிறைத்துறைக்கும் டிஜிபிகளாக இருக்கும் (முறையே) கந்தசாமி, முஹம்மது ஷஹில் அக்தர் ஆகியோரின் பணியிடமும் அந்த பணிக்கான அவர்களின் தேவையும் சிறப்பான செயல்பாடும் அவர்களின் பதவியை அதே இடத்தில் தக்க வைத்துள்ளதாக சொல்லப் படுகிறது. அதேபோல் தனித்தனி டிஜிபி தகுதி பதவிகளான ரயில்வே மற்றும் தீ அவிப்புத் துறை ஆகிய இரண்டுக்கும் ஒரே டிஜிபியாக சைலேந்தர்பாபு இருந்த போதுதான் டிஜிபி தகுதி பதவிகளுக்கான இடமாற்றம் வந்தது; அதிலிருந்துதான் கரன்சின்ஹாவுக்கு தீ அவிப்பு (ம) மீட்புப்பிரிவு பிரித்துக் கொடுத்து விட்டு சைலேந்தர்பாபுவை ரயில்வே டிஜிபியாகவே பதவியில் தொடர வைத்தனர். அதை ‘காரண’ த்தோடு சுட்டிக் காட்டுகிறது காவல்துறை வட்டாரம். யுபிஎஸ்ஸி பரிந்துரை செய்யும் சிலரில் ஒருவரை மாநில அரசுதான் கொள்கை முடிவு – பணித்தேவை அடிப்படை என்ற ரீதியில் தேர்வு செய்வது வழக்கம். என்னுடைய சொந்தக் கருத்து அரசின் பணித் தேவை முடிவாக இருப்பதும் இல்லாததும் இம்மாத 30 தேதிக்குள் தெரிந்து விடும். (ந.பா.சேதுராமன் – முகநூல் பதிவு- 27.06.2021)

Credit: ந பா சேதுராமன் சீனியர் journalist