பெங்களூரு:

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி இந்த தேர்தலில் அதிக கவனம் செலுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த வகையில் பெங்களூருவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி சர்ச் தெருவில் உள்ள ஒரு புத்தக கடைக்கு சென்றார். அவருடன் முதல்வர் சித்தராமையா மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர். அப்போது சித்தராமையா 3 புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கினார். அந்த மூன்றையும் ராகுல்காந்திக்கு பரிசளித்தார்.

அதில் ஒரு புத்தகம் பெருமாள் முருகன் எழுதிய ‘‘ஆடு திருடன்’’ (தி கோட் தீஃப்) என்ற ஆங்கில புத்தகமும் அடக்கம். தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகன் எழுதிய இந்த புத்தகத்தை கல்யாண ராமன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.