டில்லி:

ரூ. 13 ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஆடிட்டர்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) சம்மன் அனுப்பியுள்ளது. முறைகேடு நிதி தொடர்பான பரிமாற்ற ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்குமாறு ஆடிட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வங்கியை 12க்கும் மேற்பட்ட சார்ட்டர்டு அக்கவுண்டன்கள் தணிக்கை செய்து வருகின்றனர். அனைவரும் நேரில் ஆஜராக போதுமான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும்.

தணிக்கை காலம் என்பது பல ஆண்டுகளுக்கு பரவி உள்ளது. தற்போது சில இடைக்கால அறிக்கையை வங்கியின் முதன்மை ஊழல் கண்காணிப்பு அதிகாரி அனுப்பியுள்ளார். எனினும் சில பிரச்னைகள் தொடர்பான ஆவணஙகள் தேவைப்படுகிறது. அதனால் அனைத்து விபரங்களும் அடங்கிய அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று சிவிசி ஆணையர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.