சென்னை: தமிழகத்தின் 16சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைந்த நிலையில்,  தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏ-க்கள் அனைவரும் இன்று பதவியேற்கின்றனர்.  இதையொட்டி,  தற்காலிக சபாநாயகரான பிச்சாண்டி அறிவிக்கப்பட்டு உள்ளார்.  அவர் இன்று புதிய எம்எல்ஏக்களுக்கு  பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 133 இடங்களை கைப்பற்றி  அருதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவும், அவரை தொடர்ந்து, 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதையடுத்து, நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார். இதையடுத்து, இன்று , சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்,  காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அப்போது, தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

அ தையடுத்து சபாநாயகர்,  துணைசபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர், இன்று நண்பகல் 12 மணிக்குள் வேட்பு மனு தாகக்ல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, திமுக சார்பில் சபாநாயகர் தேர்தலில் அப்பாவும், துணை சபாநாயகர் தேர்தலில் கு.பிச்சாண்டியும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி அறிவித்ததள்ளது.

சட்டப்பேரவையில் திமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், அப்பாவு சபாநாயகராகவும், பிச்சாண்டி துணை சபாநாயகராகவதும் உறுதியாகியுள்ளது.

இதற்கிடையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அதிமுகவில் கடும் போட்டி நிலவியது. பின்னர், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டதாக, அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதத்தை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி. காமராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோர், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினர்.