3டி  அச்சு என்பது நாம்  முப்பரிமாண அச்சு என்று நினைத்திருப்போம். ஆனால் அதுவும் ஒரு புறம் என்றாலும் உண்மையில் 3டி அச்சு என்பது நவீன அறிவியலின் உச்சக்கட்டம் எனலாம்.

அதாவது செங்கல் உருவாக்க களிமண், தண்ணீர் இவைகளையெல்லாம் உருவாக்கத் தேவையான மூலக்கூறு களை 3டி அச்சு இயந்திரத்தில் கொடுத்துவிட்டால் செங்களை உருவாக்கித்தந்துவிடும். 3டி அச்சு என்பது எல்லாத்துறையிலும் இப்படித்தான் இயங்குகிறது. அதாவது எதை உருவாக்கப்போகிறோமோ அதன் மூலக்கூறு களை அச்R  இயந்திரத்தில் கொடுத்துவிட்டால் அச்சு இயந்திரம் நமக்குத்தேவையானதை உருவாக்கித் தந்துவிடும்.

3டி அச்சு இயந்திரத்தில் வீீடு கட்டப்போனால் செங்கல், மணல் கூட்டமைப்பில் உள்ள மூலக்கூறுகள், இயந்திரங் கள் உருவாக்கப்பட்டால் தனிமங்களில் உள்ள மூலக்கூறுகள், மருத்துவத்துறையில் மனித உறுப்புகள் உருவாக்கப்பட்டால் மனித திசுக்களும், ஸ்டெம் செல்களும்தான் மூலக்கூறுகள் அப்படித்தான் இந்த செய்தில் வரும் 3டி இதயமும், மனிதத்திசுக்களை கொண்டு  மையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது,  இந்த  இதயத்தினை  மனித திசு மற்றும் இரத்தக் குழாய்கள் உடன் இஸ்ரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழகம், முயல் அளவிலான சிறிய இதய உருவாக்கம் மூலம்  இதய மாற்று சிகிச்சைக்கான காலம் வெகு விரைவில் வரும் என்றும் இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்

உலக அளவில் 3டி அச்சின் வழியாக இதய உருவாக்க கட்டமைப்பினை இதுவரை யாரும் செய்யவில்லை என்றும் தாங்கள்தான் முதன்முதலில் உருவாக்கியுள்ளோம் என்றும் இந்த திட்டத்தினை மேலாண்மை செய்து வரும் டல் டிவிர் தெரிவித்தார். மேலும் 3டி அச்சின் மூலம் இதயத்தினை கடந்தகாலத்தில் உருவாக்கினாலும் திசு மற்றும் இரத்தக் குழாய்களுடன் யாரும் உருவாக்கவில்லை என்றும்,  இப்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த இதயத்தின் மூலம் திசுக்களுக்கு இடையே தொடர்புகளை உருவாக்கமுடிந்தாலும் இரத்தத்தினை பம்பு செய்யாது என்றும் விரைவில் அதை உருவாக்கிவிட்டு முதலில் சிறு சிறு விலங்களுக்கு பரிசோதனை செய்துபார்க்கப்படும் என்றும்,

3டி மூலம் உருவாக்கப்படும் இதயம் அந்தந்தந்த நோயாளிகளின் இரத்தத் திசுக்களின் மூலம் உருவாக்கப்பட்டால் இதயம் மாற்று அறுவை சிகிச்சையின் போது அதை நம் உடல் ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

படம் :  (JACK GUEZ / AFP)  

-செல்வமுரளி