ண்டன்

ண்டன் எலிசபத் டவரில் அமைக்கப்பட்டுள்ள பிக்பென் என்னும் மணிக்கூண்டு பராமரிப்பு பணிகள் காரணமாக நான்கு வருடங்களுக்கு நிறுத்தப்படுகிறது.

லண்டன் மாநகர வாசிகளுக்கு பிடித்த ஒரு இசை விருந்து பிக் பென் மணிக்கூண்டில் இருந்து வரும் மணி ஓசை தான்.   இதைப் பற்றி முதலில் தெரிந்துக் கொள்வோம்.   157 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது 96 மீட்டர் உயரமுள்ள எலிசபெத் டவர் மணிக்கூண்டு.   அங்கு பிரம்மாண்டமான ஓசையை எழுப்பும் மணி ஒன்று உண்டு.  இந்த மணியின் பெயர் பிக் பென்.   காலப்போக்கில் மணிக்கூண்டின் பெயரும் பிக் பென் ஆனது.   இந்த பிரம்மாண்டமான மணி              13.7 டன் எடையுள்ளது.   ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை இது அடிக்கும் ஓசையை கேட்க லண்டன் மாநகரில் பல ரசிகர்கள் உண்டு.  சொல்லப் போனால் பி பி சி ரேடியோ மற்றும் தொலைக்காட்சியை லண்டன்வாசிகள் விரும்புவதற்கு இணையாக இந்த மணி ஓசைக்கும் ரசிகர்கள் உண்டு.

தற்போது இந்த மணிக்கூண்டு பராமரிப்புக்கும், நவீன மயமாக்குதலுக்குமாக நான்கு வருடங்களுக்கு மூடப்படுகிறது.  லண்டன் நேரப்படி ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு 12 மணியுடன் இந்த ஓசை நிறுத்தப் படுகிறது.  வரும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போது இந்த மணியின் ஓசை மீண்டும் ஒலிக்கத் துவங்கும்.   இதற்கான செலவு யூரோவில் 29 மில்லியன் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.   தற்போதைய தொழில் நுட்பத்துக்கு பதில் நவீன மின்சார மற்றும் மின்னணு சாதனங்களால் இயங்கும்படி மாற்றப்படும்.

வரும் நான்கு வருடங்களுக்கு முழுமையாக மூடப்படும் இந்த மணிக்கூண்டில் ஒரே ஒரு பக்கம் உள்ள கடியாரம் மட்டும் நிறுத்தாமல் ஓட்டப்படும்.   இன்னும் இதை பார்த்து தங்களின் கைக்கடியார நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் மூத்த குடிமக்களை ஏமாற்ற அரசு விரும்பாததே இதன் காரணம்,