நெட்டிசன்:

(வாட்ஸ்அப்பில் வைரலாகியிருக்கும் கற்பனை அறிக்கைகள்)

டால்டா ராகவன் : பொதுவா பாத்திங்கன்னா சாப்பாடு நமக்கேயில்ல. இதுகுறித்து நம் மதிப்பிற்குரிய பாரத பிரதமர் மோடி அவர்களே சாப்பிடலங்க….இது பாரத மாதாவுக்காக நம் ராணுவ வீரர்களோட தியாகம்ங்க….2018ல் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்.

2018ல் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்ங்க.

சின்னக்குயில் வானதி :- தோழர்ர்ர்ர் ச்சொன்னதைப்போல் அப்படி ஒன்று நடந்திருந்தால் அது முந்தைய காங்கிரசு அரசின் நடவடிக்கையாக தான் பார்க்கனும். 2018ல் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்.

மண்டைக்காடு ராஜா :- இது பாகிஸ்தானோட சதிங்குறேன். நம்மோட உணவை ஆட்டையப்போட்டுட்டாங்குறேன். 2018ல் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்ங்குறேன்.

பூம்பூம் பானு கோம்ஸ் :- தேச நலனுக்காக சாப்பிடாம கூட எல்லையில் நிக்கலாமே அதனால ஒன்னும் பிரச்சனையே இல்லையே…

பொரி உருண்டை பொன் ராதா :- இப்ப தான் அவுங்களுக்கு பிரியாணி வாங்கி போட்டேன். நீங்க சொல்ற மாதிரி அப்பிடி ஒரு சம்பவமே நடக்கல. இங்க விவசாயிகள் சாகும் போது அவர்களுக்கு சாப்பாடு தேவையா. 2018ல் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்

வீரமங்கை அக்கா தமிழிசை :- அதாவது ராணுவம் என்பது வேறு, மிலிட்டரி என்பது வேறு ராணுவத்தினர்க்கு உணவு உள்ளது மிலிட்டரிக்கு உணவு இல்லை இதற்கு காரணம் பாகிஸ்தான், காங்கிரஸ், கருணாநிதி தான். சுருக்கமாக bjp வேறு பாஜக வேறு. 2018ல் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்.