கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்த முடிவு

Must read

திருவெற்றியூர்:

ண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக,வட சென்னை பொதுநல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாதவரம் முதல் சென்னை துறை முகம் வரை கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பையும், கடும் போக்குவரத்து நெரிசலைலும் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை துக்க வேண்டும் என்று சென்னைத் துறைமுக நிா்வாகத்திடம் பல முறை மனு அளிக்கப்பட்டது.

இதை ஏற்று சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னா் லாரிகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்பு நடவடிக்கைகளை சென்னைத் துறைமுக நிா்வாகமும் அறிவித்தது.

ஆனாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய வட சென்னை பொதுநல சங்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், மாதவரம் முதல் சென்னை துறை முகம் வரை கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பையும், கடும் போக்குவரத்து நெரிசலையும் தடுக்க – மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக,வட சென்னை பொதுநல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

More articles

Latest article