குடிப்பழக்கத்தை நிறுத்த விரும்புகிறவர்களுக்கு ஒரு எளிய வழி!

Must read

டல் நல பாதிப்பு, பொருளாதார சிக்கல், அவமானங்கள், புறக்கணிப்புகள், குடும்பத்தில் பிரிவு… குடியால்எ எத்த்ததனையே இழப்புகள்…
ஒருகட்டத்துக்கு மேல், குடியை விட நினைத்தாலும், விட முடிவதில்லையே.. ஏன்..?
குடி என்பது பழக்கமல்ல.. நோய்… உடல் மற்றும் மனம் சார்ந்த நோய். இந்த நோயை நீக்கவே முடியாது. அதாவது குடிக்கும் ஆசையை நீக்கவே முடியாது.
அப்படியானால், குடித்தே அழிய வேண்டியதுதானா?
இல்லை. குடிக்கும் ஆசையை, துடிப்பை அடக்கி ஆள, மகிழ்ச்சியாக வாழமுடியும்.

a
“சர்க்கரையை” நம் கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியத்துடன் வாழ்வதில்லையா.. அது போலத்தான் குடி நோயை அணுக வேண்டும்.
இதற்கு சரியான ஒரே தீர்வு. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு. அதாவது அடையாளம் அற்றவர்கள், அல்லது விரும்பாதவர்கள் அமைப்பு. சுருக்கமாக ஏ.ஏ..
அமிஞ்சிகரையிலிருந்து அமெரிக்காவரை உலகம் முழுதும் பரவியிருக்கும் இந்த ஏ.ஏ. அமைப்பினால் பல லட்சக்கணக்கான குடிகார்கள் (குடி நோயாளிகள்) குடிப்பழக்கத்தைவிட்டு விலகி நின்று, வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்… பெறுகிறார்கள்.
குடியால் உடல் நலிவுற்று மரணத்தின் விளிம்புக்குச் சென்றவர்கள் கூட இந்த அமைப்பில் சேர்ந்து இன்று ஆரோக்கியமான, மரியாதை உள்ள மனிதனாக உலா வருகிறார்கள்.
இங்கே மருந்து இல்லை, கட்டணம் இல்லை!
இந்த அமைப்பில் சேர ஒரே ஒரு நிபந்தனைதான்:
அது – குடிப்பதை வி ட வேண்டும் என்கிற மனப்பூர்வமானவிருப்பம்!
உங்களுக்கோ உங்கள் உறவினர் நண்பருக்கோ குடிப்பழக்கம் இருந்து அதைவிட்டு முற்றிலுமாக விலக விரும்பினால் அருகில் உள்ள ஏ.ஏ. அமைப்பை தொடர்புகொள்ளுங்கள்.
தகவல்களுக்கு:
தமிழகம்: 9840507405 9940292386 9841029998
தலைமையகம்: 022- 23075134, 23016767 ( மும்பை)
இணையதளம்: www.aagsonindia.org
(patrikai.com இதழில் இருந்து..)

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article