மும்பை: ரீடிங் கிளாஸ் இல்லாமல் கண் சொட்டு மருந்து போட்டுக்கொண்டு வாசிக்கலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிரஸ்வியூ’ கண் சொட்டு மருந்துக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது.
வயது முதிர்வு காரணமாக மனிதர்களுக்கு புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றை வாசிப்பதில் சிரமம் ஏற்படும். இது வெள்ளெழுத்து பிரச்சினை என்று கூறப்படுகிறது. இது, மருத்துவதில், பிரஸ்பயோபியா’ என அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு கண் மருத்துவமனைகளில் தனி கண்ணாடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கண்ணாடிகளை பலர் கண் கண்ணாடி கடைகளிலேயே செக் செய்து வாங்கி அணிந்து வருகின்றனர். இதுபோன்ற வெள்ளளெழுத்து கண் கண்ணாடிகள் விலை குறைவு என்பதால் ஏராளமானோர் அதை வாங்கி உபயோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளெழுத்து பிரச்சினை உள்ளவர்கள் ரீடிங் கிளாஸின்றி தங்கள் நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம் என பிரபல மருந்து யாரிப்பு நிறுவனமான என்டாட் பார்மாடிகல்ஸ் மருந்து நிறுவனம் கடந்த வாரம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, தங்களது நிறுவன தயாரிப்பான ‘பிரஸ்வியூ’ கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம். இந்த சொட்டு மருந்தை கண்களில் இரு சொட்டு விட்டால் போதும். கண் கண்ணாடி அணிய தேவையில்லை. அடுத்த 15 நிமிடத்தில் கண்ணாடி அணியாமல் அப்படியே வாசிக்க முடியும் என விளம்பரப்படுத்தியது.
இந்த திடீர் விளம்பரம் ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும், மற்றொருபுறம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இந்த சொட்டு மருந்தை தயாரிக்க, சந்தைப்படுத்த மறு உத்தரவு வரும் வரை மத்திய மருந்துகள் நிபுணர் குழு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது. அதற்கான விளக்கத்தையும் சிடிஎஸ்சிஓ கொடுத்துள்ளது.
முன்னதாக இந்த கண் சொட்டு மருந்துக்கு அந்நிறுவனம் முறையாக விண்ணப்பித்த நிலையில், அதை ஆய்வு செய்த சிடிஎஸ்சிஓ அனுமதி வழங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரின் (டிசிஜிஐ) அனுமதியும் தொடர்ந்து பெறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த மருந்து தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், சிடிஎஸ்சிஓ அனுமதியை ரத்து செய்துள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் சம்பந்தப்பட்ட மருந்தை மருந்து நிறுவனம் தயாரிக்க கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், தவறாக வழிநடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ள காரணத்தால் மக்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக சிடிஎஸ்சிஓ தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்போது இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனமும் தடை விதித்துள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) PresVu ஐ உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதற்கான உரிமத்தை இடைநிறுத்தியுள்ளது,
முன்னதாக, என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் கடந்த 4-ம் தேதி ‘பிரஸ்வியூ’ சொட்டு மருந்து குறித்து என்டாட் பார்மாடிகல்ஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது. அப்போது, பொதுமக்களை பாதிக்கும் ப்ரெஸ்பியோபியாவில் இருந்து கண்களை பாதுகாப்பாக கூறியளது. மேலும், இது ப்ரெஸ்பியோபியா உள்ளவர்களுக்கு படிக்கும் கண்ணாடிகளின் தேவையைக் குறைப்பதாகக் கூறியது.
இது மக்கள் மத்தியில் அதீத கவனம் பெற்றது. அதே நேரத்தில் இதில் பயன்படுத்தப்பட்ட Pilocarpine என்ற மருந்து பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தயாரிப்பின் அங்கீகரிக்கப்படாத விளம்பரம் குறித்த கவலைகளைத் தொடர்ந்து தற்போது, மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அதன் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதற்கா காரணமாக, பொதுமக்களின் நலன் கருதியில், இந்த மருந்தினால், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து பற்றிய சந்தேகங்களை எழுப்பிஉள்ளது.