சென்னை:

திமுக உள்பட தமிழக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,  இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் அறிவித்து உள்ளார்.

மிழகத்தில் அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், நிலைய அலுவலர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது தென்னக ரயில்வே உயர் அதிகாரி அனைத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில்,  திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் திமுக உடனடியாக போராட்டத்தை கையில் எடுத்த நிலை யில், சென்னையில் திமுகவினர் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் சென்னையில் உள்ள  தெற்கு ரயில்வே அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கினார்.

அப்போது, இந்தி திணிப்பு சுற்றறிக்கையை ரயில்வே உடனே திரும்ப பெற கோரி திமுகவினர் வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து,  எந்த மொழியிலும் பேசலாம் என திமுகவினரிடம் ரயில்வே அதிகாரிகள், தவறுதலாக கொடுத்த ஆர்டரை திரும்பப்பெறுவதாக விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து கூறிய ரயில்வே பொதுமேலாளர்,  அதிகாரிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாகவும், . பழைய முறையே நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அருகே மொழிப் பிரச்சினை காரணமாக,  இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோத இருந்த பெரும் விபத்து கடைசி நேர கண்டுபிடிப்பால் தவிர்க்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரயில்வே பணியாளர்கள் மூன்று பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தர விட்டு சுற்றறிக்கை அனுப்பியது.

தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற தெற்கு ரயில்வே உத்தரவை கண்டித்து சென்னையில் திமுகவினர் போராட்டம் நடத்த திரண்டனர்.

இந்த நிலையில், தற்போது இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.