** சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் , இரு தினங்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றைச் சொல்லி மக்களைத் திடுக்கிட வைத்துள்ளார்!
“திடீரென்று கொட்டிய மழையை எங்களால் கணிக்க முடியவில்லை! வளிமண்டலத்தைக் கண்காணிக்கும் அளவுக்கு எங்களிடம் நவீன ரேடார்கள் இல்லை! இதனால் நாளை பெய்யும் என்று நாங்கள் கணித்த மழை ஒரு நாள் முன்னதாகவே கொட்டித்தீர்த்தது…”0 என்று அவர் கூறியிருக்கிறார்!
இதைப் போலவே மழை பெய்து பகுதிகளில் ஆய்வு செய்த முதல் அமைச்சர் ஸ்டாலின், ” இந்த வசதிகளை மத்திய அரசு தான் செய்து தர வேண்டும்… ” என்றார்.
இதைத் தொடர்ந்து, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ” இந்த நவீன ரேடார் வசதிகள் வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பல முறை வேண்டுகோள் விடுத்தும் ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை!
என்று தெரிவித்துள்ளார்!
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு லட்சக்கணக்கான கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, மக்களைக் காப்பாற்றும்
இந்த கருவிகளை வாங்காமல் அலட்சியம் காட்டுகிறது… ” என்று கோபத்தில் இருக்கிறார்கள் மக்கள்!
*** ஆளுநர் ஆர். என். ரவியை அண்மையில் சந்தித்த சி. வி. சண்முகம் உள்ளிட்ட அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர்கள், ‘ தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு’ பற்றி முறையிட்டு இருக்கிறார்கள்!
அதில், ” ராஜேந்திர பாலாஜி மீது ஊழல் வழக்கு இருப்பது உண்மை! அதற்காகஅவரைக் கைது செய்யத் தேடுகிற தமிழக அரசின் முடிவு, ஒரு பழிவாங்கும் நடவடிக்கை” என்று தெரிவித்திருக்கிறார்கள்!
அது கிடக்கட்டும்….. “கை சுத்தமான”ராஜேந்திர பாலாஜி,தன் மீது உள்ள வழக்கில் கைது செய்யப் படுவோம் என்று தெரிந்து தானே முன் ஜாமீீனுக்கு விண்ணப்பித்தார்?
அதைக் கோர்ட்டு தள்ளுபடி செய்த பிறகு, அரசு அவரைக் கைது செய்ய முயற்சிப்பது சட்டப்படி சரிதானே?
இதில், ‘ பழி வாங்கும் நடவடிக்கை’ எங்கிருந்து வந்தது?
என்று மக்கள் கேட்கிறார்கள்!
*** ஓவியர் இரா. பாரி.