பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை

Must read

சென்னை:
ள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில், அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் அறிவித்தார்.

அதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்றும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கும் தேதியும் வெளியிடப்பட்டது.

அது தவிர மாணவர்கள் நடப்பு ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு, விடுமுறை, காலாண்டு , அரையாண்டு தேர்வுகள் எப்போது என்பது குறித்து இணையதள வாயிலாக அறிந்துகொள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

More articles

Latest article