சென்னை:
பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள். அதில் `பொதுத்தேர்வு 2022-ல் பங்கேற்காத மாணவ/மாணவியர் எண்ணிக்கை குறித்த மீளாய்வு இன்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10th, 11th, 12th பொதுத்தேர்வு எழுதாத மாணவ/மாணவியரை ‘உடனடித் தேர்வில்’ கலந்து கொள்ளச் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்கான ‘செயல்திட்டத்தை’ தயார் செய்திடும்படி அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.