சென்னை,

மிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

பருவமழை பொய்த்து போனதாலும், கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்துள்ளதாலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்த  மழையின் காரணமாக பயிரிடப்பட்ட பயிர்களும் வெயிலில் கருகி வீணாகி போனது.

இதை காணும் விவசாயிகள் அதிர்ச்சியாலும், செய்வதறியாது தற்கொலை செய்தும் உயிரை மாய்த்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விவசாயிகள் மரணம் அதிகரித்துள்ளது பொதுமக்களையும், அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையடுத்து அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியது.

இதன் காரணமாக தமிழக அரசு, அந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அமைச்சர்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அறிவுறுத்தியது.

அதன்படி வறட்சி குறித்த அறிக்கை இன்று முதல்வர் பன்னீரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக விவசாயிகளுக்கு  அன்னவாரி சான்றிதழ் அளிக்கப்படும். மேலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படும்.

மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதியுதவி கோரப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.