சென்னை,

மிழகத்தில் இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

தமிழகம்  முழுதும் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்வது மடிவது குறித்து மத்திய மாநில அரசுகள்  அலட்சியம்  காட்டி வருவதாகவும், பாரம்பரிய விளையாட்டான  ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை எதிர்த்தும்,  சென்னை எழும்பூர் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.  இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தமிழகர்களின் வீர வீளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டியை சுப்ரீம் கோர்ட்டு தடை  செய்துள்ளது.  இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக போட்டியை நடத்துவது என்று பொதுமக்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த இளைஞர் போராட்டம் தற்போது மாணவர் போராட்டமாக மாறி வருகிறது.

மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுதும் பரவி வருகிறது. பலமாவட்ங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று எழும்பூர் கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் காலியிலிருந்தே உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற னர்.

இந்த போராட்டம் அனைத்து கல்லூரிகளிலும் பரவும் என தெரிகிறது.