சென்னை: தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால், தமிழ்நாட்டில் தற்போது கட்டுமானம் உள்பட பல்வேறு தொழில்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பணிகள் நிமித்தமாக வசித்து வரும் 90 சதவீத வட மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால் கட்டுமான தொழில் முடங்கியுள்ளது என கட்டுமான பொறியாளர் சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கல்வித்தரம் உயர்ந்துள்ளதால், பெரும்பாலோர் படிப்பறிவு பெற்று பல்வேறு அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் கவுரமான வேலைகளில் அமர்ந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் விவசாயம் உள்பட கூலித்தொழில் மற்றும் பல்வேறு கடின உழைப்புக்கான தொழில்களில் தொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கேற்றவாறு, கட்டுமான பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை, அதிரிகத்துக்கொண்டே செல்கிறது. மேலும், தமிழர்களை காட்டிலும், வடமாநிலத்தவர்களுக்கு கூலி குறைவாக பெறுவதால், அவர்களையே தொழில் நிறுவனங்களும், கட்டுமான நிறுவனங்களும் பணியமர்த்தி வருகின்றன. மேலும் வடமாநில தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணி செய்வது மட்டுமின்றி, அவர்களால், தொழிற்சங்கம் போன்ற தேவையற்ற பிரச்சினைகள் வராது என்பதால், தமிழ்நாட்டைச்சேர்ந்த பெரும்பாலான தொழிற்நிறுவனத்தினர், ஹோட்டல்கள், ஆலைகள் நடத்துவோர், தங்களது நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களையே பணியமர்த்தி வருகின்றனர்.
இதனால் தினசரி தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வரும் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுதும் இவர்கள் பரவி இருந்தாலும், சென்னை, திருப்பூர், கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். திருப்பூரில் ஜவுளித்துறை மற்றும் பிற தொழில்களில், 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவையில், 2 லட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர். சுமார் 8லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்டுகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், வடமாநிலத்தவர்கள் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறித்துக்கொள்வதாக குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பெரும்பாலான கொள்ளை சம்பவங்களுக்கு வடமாநிலத்தவர்களை குற்றம் சாட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சாதி மதங்களைக்கொண்டு அரசியல் செய்து வரும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், சமீப காலமாக வடமாநிலம், தென்மாநிலம் என மக்களிடையே வெறுப்பை கக்கும் வகையில் பேசி அரசியல் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2021) அரசியல் மாற்றம் ஏற்பட்டதும், தமிழ்நாட்டில் தங்கி பணியாற்றி வரும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று தமிழகஅரசு உத்தரவிட்டது. வெளிமாநில தொழிலாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், தங்களால் பணியமர்த்தப்படும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரது விவரங்களையும் பதிவுசெய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. அதன்படி, வெளிமாநிலதொழிலாளர்களின் பெயர், முகவரி, ஆதார் அட்டை, புகைப்படம் போன்ற ஆவணங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டது.
இதுபோன்று பேசுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதே உண்மை. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது திமுக தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல திமுகவினர், பாமகவினர், அதிமுகவினர், தவாக மற்றும் நாம் தமிழர், பாஜக உள்பட பெரும்பான கட்சிகளின் நிர்வாகிகள், வடமாநில தொழிலாளர்கள் மீது வன்மையாகவே பேசி வருகின்றனர். தமிழர்களின் வேலைவாய்ப்பை வடமாநிலத்தவர்கள் பறித்துக் கொள்வதாக குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பெரும்பாலான கொள்ளை சம்பவங்களுக்கு வடமாநிலத்தவர்களை குற்றம் சாட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சாதி மதங்களைக்கொண்டு அரசியல் செய்து வரும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், சமீப காலமாக வடமாநிலம், தென்மாநிலம் என மக்களிடையே வெறுப்பை கக்கும் வகையில் பேசி அரசியல் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது, அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தொழிற்நிறுவனங்கள் வெறிச்சோடின. அங்கு பணியாற்றி வந்த வடமாநிலத்தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களும், அரசியல் கட்சியினர் வழங்கும் பணம் மற்றும் இலவசத்துக்கு ஆசைப்பட்டு, தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு சென்று விட்டதால், அங்குள்ள நெசவுத்தொழில் அடியோடு முடங்கின. இதைக்கண்டு அங்குள்ள தொழில்நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சூழலில், ஈரோடு கிழக்கு வெற்றி, முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் வடமாநில கட்சி தலைவர்கள் போன்றவர்கள் பங்கேற்றதால், ஈரோடு, திருப்பூர் பகுதியில், வடமாநிலத்தவர்களும், தமிழர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதாக பல்வேறு வதந்திகள் பரவின. இதுபோன்ற வதந்தி வீடியோக்களை வடமாநிலங்களில் பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர். இதனால் வட மாநிலங்களில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் சாரை சாரையாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதனால், தமிழ்நாட்டின் பல தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளித்துறை மற்றும் பிற தொழில்களில், 3லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவையில், 2 லட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர்.‘ பீஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், உ.பி., உட்பட, 21 மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒற்றுமையாகவே வசித்து வருகின்றனர்.
தற்போது அரசியல் கட்சிகளின் அநாகரிக பேச்சால், தமிழ்நாட்டின் தொழில்துறையே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளில் பணியாற்றி வந்த பல தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளதால், அங்குள்ள தொழில்நிறுவனங்களின் அதிபர்கள் கடும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், கட்டுமான பணியில் இருக்கும் 90 சதவீத தொழிலாளர்கள் வேலையைவிட்டு வெளியேறி வருகிறார்கள்’’ என கட்டுமான பொறியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ’’கடந்த 10 நாட்களில் வட மாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற தவறான வதந்திகள் கொண்ட வீடியோக்கள் பரவி வருகிறது. இதனால் அச்சமடைந்த அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி செல்கின்றனர். இந்த நிலையில் கட்டுமான பணியில் இருக்கும் 90 சதவீத தொழிலாளர்கள் வேலையைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.
கட்டுமான தொழிலைப் பொறுத்தவரை தற்போது வட மாநில தொழிளாலர்களின் தேவை அதிகமாய் இருக்கிறது. கடந்த 10 நாட்களாக தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு உள்ள இளைஞர்கள் கட்டுமான தொழில்களில் பணிபுரிய விரும்புவதில்லை. வட மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால் கட்டுமானம் மட்டும் இல்லாமல் அதை சார்ந்துள்ள பல தொழில்கள் பாதிக்கப்படுகிறது.
வட மாநில தொழிலாளர்கள் நமது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றுகின்றனர். தமிழக அரசு இது தொடர்பாக சிறப்பாக பணியாற்றி வருகின்றது. வட மாநில தொழிலாளர்களை நகையாடும் நோக்குடன் இணையதளத்தில் சில வீடியோக்கள் வெளியாகிறது. அதன் தாக்கம் தற்போது தான் வெளிவரத் தொடங்கியுள்ளது.
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்து உள்ளனர்.
வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வீண் வதந்திகளை தவிர்க்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு முடுக்கி விட்டுள்ளது.
பிற மாநில தொழிலாளர்கள், தங்கள் பணியிடங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின், 1077 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில், மாவட்ட வருவாய் அலுவலரை தலைவராக கொண்ட, ‘புலம்பெயர் தொழிலாளர் குறை களைவு குழு’ அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில், மாநகர போலீஸ், எஸ்.பி., அலுவலகம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் செயல்படும் தொழில் பாதுகாப்பு பிரிவில் தெரிவிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வேறு மாநிலத்திற்குச் சென்று பணியாற்றுவதற்கும், அங்கேயே நிலம் வாங்கி செட்டில் ஆவற்கம் நமது நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்று பலர் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பல மாநிலங்களிலும் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அதுபோல தமிழ்நாடட்டில், 2016 ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் கடந்த அ.திமு.க. அரசு, தமிழக சட்டமன்றத்தில், அரசுப் பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள்) சட்டம் கொண்டுவந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்தது. இதன்படி 7.11.2016 இல் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை, தமிழக அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணியில் சேரலாம் என்று தெரிவிக்கிறது.
அரசு பணிகளுக்கே வடமாநித்தவர்கள் சேரலாம் என அரசாணை உள்ள நிலையில், தனியார் நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் பணி செய்வதில் என்ன பிரச்சினை என்பதுதான் புரியவில்லை.
சமீப காலமாக, தமிழ்நாட்டில் மொழிப்பிரச்சினைகளை கொண்டு அரசியல் செய்து வரும் நிலையில், தற்போதைய தமிழகஅரசியல், தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் மாநில தொழிலாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்பாதிப்பே தற்போது வெளியாகி உள்ள வதந்தி வீடியோ… அதன் காரணமாக வடமாநிலத்தவர்கள் தங்களது மாநிலங்களை நோக்கி செல்லும் அவலம் உருவாகி உள்ளது. இதன் பாதிப்பு, இன்று தொழிற்துறைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பதை தவிர்த்து வடமாநில தொழிலாளர்கள் விஷயத்தில் அரசியல் செய்யாமல் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், தொழிற்துறை முடங்கா வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை தொழிற்நிறுவனங்களும், கட்டுமான நிறுவனங்கள், ஓட்டல் தொழில்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
வடமாநிலத்தவர்கள் விவகாரம் குறித்து அண்ணாமலை அறிக்கை! காவல்துறை தீவிர ஆலோசனை…