உளுந்தூர்பேட்டை:  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் ஊரடங்கை மிறி ஊர் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஒப்படைக்கப்படும் என  காவல்துறையினர் நூதன பிரசாரம் மேற்கொண்டனர். இதனால், இளைஞர்களிடையே தடுப்பூசி போடும் எண்ணம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அரசின் உத்தரவை மீறி, வெளியே சென்றவர்களிடம்,   ஊரடங்கு விதிகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் தரப்படும் என  உளுந்தூர்பேட்டையில் டிஎஸ்பி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இளைஞர்கள் பலர் உடனே சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டதுடன், அதற்கான ஆதாரத்தை காண்பித்து, தங்களது வாகனங்களை பெற்றுச் சென்றனர்.

ஒரே நாளில்,  15க்கும் மேற்பட்டோர் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான ஆவணங்களை காட்டி வாகனங்களை எடுத்து சென்ற  நிகழ்வு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.