சென்னை: சென்னை வந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள்,   தமிழகச் சட்டமன்றத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தமிழகம் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, ஆலோசனை நடத்தத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார், துணை ஆணையர் உள்ளிட்ட குழுவினர் 2 நாள் பயணமாகச்  இன்று காலை 11 மணி அளவில் சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும், கிண்டியில் உள்ள  விடுதியில் தங்கி ஆலோசனை நடதத்தி வருகின்றனர்.

மதியம் 12 மணிக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்களுடன் தேர்தல் ஆணைய குழு தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம்,   அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் தேர்தல் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் குழு நேரடியாக சென்று, ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (புதன்கிழமை) முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஆய்வு மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.