கொரோனா ஊரடங்கு காலத்தில் கதையொன்றை எழுதி படமாக்கிய கார்த்திக் ராஜு. படத்தில் ரைசா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது.

இந்தப் படத்துக்கு தி சேஸ் என்று பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ஃபர்ஸ்ட் லுக்கில் தலைகீழாக தொங்கும் படி ரைசா உள்ளார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.