இந்தியாவில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்தியஅரசு…

Must read

டெல்லி: இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்திய அரசு இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப்பில் வசிக்கும் அகதிகள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த  மாநிலங்களிலுள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் அண்டை நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் சமீபத்தில் அமலுக்கு வந்துள்ள திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்பட தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்பட பல  மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நாடாளுமன்றத்தில் திருத்தியமைக்கப்பட்ட சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தலால் தப்பி வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், சமணர்கள், பெளத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க, புதிய சட்டம் வகை செய்கிறது. ஆனால் இஸ்லாமியர்களுக்கு உரிமை வழங்க மறுத்து வருகிறது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வெகு குறைவு என்பதால், அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க முடியாது என்றும்,   குறிப்பிட்ட  மூன்று நாடுகளை சேர்ந்தவர்கள், இந்தியாவில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தால், அவர் தனது பிறப்புத்தேதியை நிரூபணம் செய்யாமல் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்திலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே குடியுரிமை சட்டத்திருத்தத்தை அதிகமாக எதிர்க்கும் மாநிலங்களில் அஸ்ஸாமும், மேகாலயாவும் குறிப்பிடத்தக்கவை. இந்த மாநிலங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து அகதிகளாக வந்துள்ள பல ஆயிரம் முஸ்லிம்கள், அந்த மாநிலங்களையே தங்களது சொந்த நாடுகளைப்போல பாவிக்கத் தொடங்கி விட்டனர். இந்த அங்கு பூர்விமகமாக வாழும் பூர்வகுடி பழங்குடியினர், சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரீதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால் இந்த சட்டத்துக்கு ஒரு பக்கம் ஆதரவும், இஸ்லாமியர்கள் தரப்பில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்திய அரசியல் கட்சிகள், வாக்கு வங்கியையே பிரதான நோக்கமாக கருதி இருப்பதால், இந்த சட்டம் சில மாநிங்களில் பூதாகாரமாகக்கப்பட்டு உள்ளது.  இந்த சட்டத்தின்படி, இந்தியாவில் பல தலைமுறையாக வாழும் ஒருவர் தன்னை இந்தியராக நிரூபிக்க வேண்டியது அவசியமா போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த சட்டத்தை  அமல்படுத்துவது,  கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும், சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப்பில் வசிக்கும் அகதிகள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட  5 மாநிலங்களிலுள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் அண்டை நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article