மும்பை:
த்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், பா.ஜ.க.வுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக அவர் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடாவை சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை மும்பையில் இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்,களிடம் பேசிய அவர், மத்திய அரசு மிக மோசமான முறையில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன, அதை நாங்கள் கண்டிக்கிறோம். மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும், இல்லை என்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுபோன்ற பல விஷயங்களை நாடு கண்டுள்ளது என்று தெரிவித்தார்.