விஜய் மல்லையா மீது சிபிஐ புதிய வழக்கு!

Must read

டெல்லி:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொடுத்த புகாரின்மீது சிபிஐ, கர்நாடக கோடீஸ்வரர் விஜய் மல்லையாமீது  சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
பிரபல கர்நாடக தொழில் அதிபர் விஜய் மல்லையா , தொழில் விருத்திக்காக வங்கிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். தொழில் நஷ்டம் அடைந்ததால், கடனை  திருப்பி செலுத்தாமல்  வெளிநாடுக்கு தப்பிவிட்டார். தற்போது இங்கிலாந்து நாட்டில் பதுங்கி இருக்கிறார்.
மல்லையாவை அங்கிருந்து வெளியேற்ற சொல்லி இந்தியா கேட்டுக்கொண்டனது. ஆனால், பிரிட்டன் இந்தியாவின் கோரிக்கையை ஏற்கவில்லை.
vijay malaya
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி  கொடுத்த புதிய  புகாரின்  அடிப்படையில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீது பிரிவு 420 (மோசடி) கீழ் சிபிஐ  புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.
அண்மையில் செக் மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர் ஆகாததால் ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article