னியம்பலம், கேரளா

ன் மீது தொடரப்படும் வழக்குகளை தமது மார்பில் உள்ள பதக்கங்களாகக் கருதுவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தற்போது கேரளாவில் பயணம் செய்து வருகிறார்.  சமீபத்தில் வயநாடு தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வெள்ளப் பெருக்காலும் மண் சரிவாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.   அப்போது அவர் வனியம்பலம் பகுதியில் உரையாற்றி உள்ளார்.

ராகுல் காந்தி தனது உரையில், “கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாகப் பல பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.   அவர்களுக்கான நிவாரண தொகை மட்டும் பணிகள் போதுமான வேகத்தில் நடைபெறவில்லை.  இது குறித்து நான் ஏற்கனவே அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்.  ஆபத்தில் இருப்போருக்கு உதவிக் கரம் நீட்டுவது வழக்கமாக உள்ள நம் நாட்டில் இங்கு நேர்ந்துள்ளவை குறித்து வெளியில் அதிகம் தெரிவிக்கப்படாமல் உள்ளது.

இந்தியாவில் வெறுப்புத் தன்மை அதிகம் நிலவி வருகிறது.   இவ்வாறு இல்லை என பாஜக தொடர்ந்து கூறி வந்தாலும் அதை நான் நம்பத் தயாராக இல்லை.    ஒரு நாட்டின் பலம் என்பது பெண்கள், அனைத்து மதத்தினர், அனைத்து இனத்தினர், மற்றும் மாறுபட்ட கருத்துள்ளவர்களை மதிப்பதிலுள்ளது.   ஆனால் எதிரான கருத்துள்ளவர்கள் மீது வழக்கு தொடுப்பது அதிகரித்து வருகிறது.

என் மீது நீங்கள் எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் நான் நீங்கள் ஏற்கனவே எனக்குச் செய்துள்ள உதவிகளை நினைத்து அன்பு செலுத்துவேன்.  என் மீது 15 முதல் 16 வழக்குகள் உள்ளன.  ஒரு போர் வீரன் தனது மார்பில் உள்ள பதக்கங்களைக் கொண்டு பெருமை அடைவான்.  என் மீது தொடரப்படும் ஒவ்வொரு வழக்கும் என் மார்பில் ஒரு பதக்கம் ஆகும்.   எவ்வளவு அதிகமாக வழக்குகள் போடப்படுகிறதோ அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சி அடைவேன்” எனத் தெரிவித்துள்ளார்.