சென்னை:

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பபடுவது போல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் எ ன பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் முகநூல் பதிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது பதிவை நீக்கிய ராஜா, அந்தப் பதிவை தனது அனுமதி இன்றி அட்மின் பதிவேற்றியதாக இன்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், மதுரை உயர்நீதி மன்றம் கிளையில், வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  பெரியார் சிலை சேதம், பூணூல் அறுப்பு விவகாரத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் காவல்துறை காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய எச்.ராஜாவின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூறியிருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.