சென்னை: தமிழகத்தை உயிர்தெழ செய்யும் தொடக்கமாக பட்ஜெட் அமையும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல்பட்ஜெட்டை நிதியமைச்சர் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக அவர்,  முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதையடுத்து  காகிதமில்லா பட்ஜெட்டை நிதி அமைச்சர் அவையில்  தாக்கல் செய்து வருகிறார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், நமது அரசின் முதல் பொது நிதிநிலை அறிக்கை #PaperlessBudget-ஆக இன்று தாக்கல் செய்யப்படுகிறது. #ResurrectingTN முன்னெடுப்புக்கான துவக்கமாக இது அமையும். என தெரிவித்து உள்ளார்.