புதுச்சேரி:
சிறுவனை கொன்று தலையை தனியாக வெட்டிய மர்மகும்பல், அந்தத் தலையை காவல் நிலையம் முன்பு வீசிச்சென்றது தமிழகம் மற்றும் புதுவையில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேர் யூனியன் பிரதேசம், பாகூர் அடுத்த குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் சுவேதன் (வயது 17). இவரை மர்மகும்பல் நேற்று (புதன்கிழமை) இரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
பிறகு தலையை மட்டும் தனியாக துண்டித்து எடுத்து. மர்ம கும்பலில் இருவர், இந்த தலையை இருசக்கர வாகனத்தில் வைத்து கடலூர் ரெட்டிச்சாவடி காவல் நிலைய வாசலில் நின்று காவல் நிலையத்தை நோக்கி தலையை வீசிச் சென்றுவிட்டனர். இந்த காட்சி, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட சுவேதனின் உடற்பகுதியை புதுச்சேரி பின்னாச்சிகுப்பத்தில் கண்டெடுத்த புதுச்சேரி போலீசார், உடலை உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல், காவல் நிலையத்தில் வீசப்பட்ட தலையும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவன் தலையை காவல் நிலையம் முன்பு வீசிய காட்சி, அங்கிருந்த சிசி டிவியில் பதிவாகி உள்ளது.
அந்த வீடியோ காட்சி:
குற்ற வழக்கு ஒன்றில், குற்றவாளிகளை அடையாளம் காட்டியதால் சுவேதன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.