சென்னை: போலீசார் மீது சட்டகல்லூரி மாணவர்கள்  கல்வீச்சு, பதட்டம்

Must read

 

சென்னை:

சென்னையில் ஒரே பைக்கில் மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் வந்ததை தடுத்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து காவலர்களுடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் தகராறு செய்ததையடுத்து மோதல் வெடித்தது.

சென்னை மில்லர் சாலையில் ஒரே பைக்கில் மூன்று சட்ட மாணவர்கள் ஒரு வழிபாதையில் வந்துள்ளனர். அவர்கள் மீது போக்குவரத்துவிதி மீறல் நடவடிக்கை எடுத்த போக்குவரத்து  காவலர்களுடன்  சட்ட கல்லூரி மாணவர்கள் வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மோதலாக மாறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சட்ட கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு விசாரணை நடத்த வந்த காவலர்களுடன் அங்கிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலைியல் மாணவர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் அயனாவரம் காவல் உதவி ஆணையர் சங்கரனுக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கல்வீசி தாக்கியதாக மூன்று சட்ட மணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதான மாணவர்களை விடு விக்க கோரி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் .  கல்லூரி விடுதி முன் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

More articles

Latest article