துருக்கி நாட்டின் தேசிய நெடுஞ்சாலையை மும்பை கோவா தேசிய நெடுஞ்சாலை என்று ஏமாற்றிய பாஜகவின் பொய்முகம் கிழிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பல்வேறு போலியான செய்திகளை வெளியிட்டு வரும் பாஜக மற்றும் அதன் சார்பு இந்துத்வா அமைப்புகள் தற்போது, துருக்கி நாட்டின் தேசிய நெடுஞ்சாலையையும் மோடியின் சாதனை என் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த நாட்டின் சாலையின் படத்தை எடுத்து, இது நமது நாட்டில் மோடியின் சாதனை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் பதிவிட்டதை கண்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நெடுஞ்சாலை  மும்பை – கோவா இடையே பிரமாண்டமான  முறையில் அமைக்கப் பட்டு இருப்பதாக பாஜக மற்றும் அதன்  ஆதரவு அமைப்புகளான  சங்க மித்தா, நமோ , ஆர்எஸ்எஸ் போன்றவைகள் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில், மோடியின் சாதனை என கூறி பறைசாற்றி வந்தன.

ஆர்எஸ்எஸ்சின் இந்த பதிவு இதுவரை 700 மில்லியனுக்கும் மேலாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் கூறியது பொய் என்று கூகுள் தெரிவித்து உள்ளது. மோடி ஆட்சியில் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டு வெளியிடப்பட்ட படம், துருக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலை என்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூகுள் நிறுவனம் தனது தேடல் கருவியை பயன்படுத்தி, இதுகுறித்து ஆய்வு செய்த போது, இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலை இந்தியாவில் எங்கும் அமைக்கப் படவில்லை என்றும், இது துருக்கில் நாட்டில் உள்ளது என்றும் தெரியப்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக பாஜக அண்டபுளுகு ஆகாச புளுகு மீண்டும் வீதிக்கு வந்துள்ளது. பாஜக அரசின்  முகத்திரை மீண்டும் கிழிக்கப்பட்டு உள்ளது.