சென்னை:
சென்னை கடற்கரை ரோடு காமராஜர் சாலையில் பாதுகாப்புக்காக நடு ரோட்டில் நின்ற பெண் போலீஸ் காவலர் மீது பைக் மோதியதில், பெண் போலீஸ் பலத்த காயம் அடைந்தார். மருத்துவ மனையில் கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், போலீஸ் பாதுகாப்பும் மாறிவிடும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது.  முதல்வர் வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் வரை 100  அடிக்கு ஒரு போலீஸ் வீதம்  நடு ரோட்டில் பாதுகாப்புக்காக  நிறுத்தப்பட்டு வருகின்றனர்.
ஏன் இந்த பாதுகாப்பு… எதற்காக… யார் முதல்வரை தாக்க நினைக்கிறார்கள்…?முதல்வர் உயிருக்கு யாரால் ஆபத்து….   ஏற்கனவே விடுதலைப்புலிகளால்  உயிருக்கு ஆபத்து என்ற பெயரால் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்தது. தற்போது எதற்காக இத்தகைய பாதுகாப்பு. பொதுமக்களை மட்டுமல்லாத காவலர்களையும் கஷ்டப்படுத்தும் இந்த பாதுகாப்பு தேவையா?
கடும் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் நடுரோட்டில் நின்று, முதல்வர் செல்லும்போதும், வரும்போதும் வாகனங்களை ஒழுங்குப்படும் வேலை செய்யும் பயிற்சி காவலர்கள் நிலை பெரிதும் துயராமானது. அதிலும் குறிப்பாக பெண் காவலர்கள் நிலை பரிதாபத்துக்குரியது.
அவசரத்துக்கு ஒதுங்கக்கூட முடியாத  நிலை. பெண் முதலமைச்சர் ஆளும் மாநிலத்தில் பெண் போலீசாரின் நிலை இவ்வளவு கவலைக்குரியதாக இருப்பது மிகவும் வேதனையான விசயம்.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போலீசாரின் உயிருக்கு என்ன பாதுகாப்பு. யார் பொறுப்பு…. 
அடிக்கடி இவர்கள் மீது இரு சக்கர வாகனங்கள் மோதும், அதில் ஒரு சிலர் தப்பி பிழைப்பதும் வாடிக்கையாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் அவர்களுக்கு விமோசனம் இல்லை… என்று மாறும் இந்த இழிவு நிலை…..
Kamarajar_Salai_and_Marina_Beach
இன்று காலை நடந்த மனம் பதபதைக்கும் விபத்து….
காமராஜர் சாலையில் முதல்வர் செல்லும் பாதையில் நின்ற போக்குவரத்து பெண் காவலர் மீது கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் மோதியதில் படுகாயமடைந்த பெண் காவலர் கைகால்களில் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் முதல்வர் போயஸ் தோட்டத்திலிருந்து கோட்டைக்கு ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கடற்காரை காமராசர் சாலை வழியாக தலைமை செயலகத்துக்கு செல்வார். அப்போது கடற்கரை சாலையின் ஒரு பக்கத்தில் பொதுமக்கள் வாகனங்கள் செல்ல முதல்வர் வாகனம் மறுபக்கத்தில் செல்லும்.
முதல்வர் பாதையில் எதிரில் வரும் வாகனங்கள் குறுக்கிடாமல் இருக்க சாலையின் நடுவில் போலீசார் நிற்பார்கள். இன்றும் அதே போல் முதல்வர் வருவதற்கு முன்னர் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகே என்ற பெண் போலீஸ்திவ்யா(26). பாதுகாப்பு பணியில் இருந்தார். சாலை நடுவில் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திகொண்டிருந்த பெண் காவலர் திவ்யா மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. இதில் இரண்டுபேரும் தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் விழுந்த பெண் காவலர் திவ்யா மயக்கமானார். உடனடியாக அருகிருந்த போலீசாரும் பொதுமக்களும் இருவரையும் மீட்டு ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பைக்கில் வந்து மோதியவர் பெயர் ப்ரவீன்(19) , வேல்டெக் கல்லூரியில் பயில்கிறார். இவருக்கு லேசான காயங்களே ஏற்பட்டது. ஆனால் பெண் காவலர் திவ்யா படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து சிந்தாதிரி பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேனர்கள் விசயத்தில் நடவடிக்கை எடுத்த முதல்வர் இதுபோன்ற பாதுகாப்பு விசயத்திலும் நல்ல முடிவு சீக்கிரமே எடுப்பார் என்று நம்புவோம்..