அன்புமணி மீதான ஊழல் வழக்கு: விசாரணைக்கு தடைவிக்க நீதிமன்றம் மறுப்பு

Must read

டில்லி:
பா.ம.க. இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமா அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி முறைகேடு வழக்கில் கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2004 – 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இவரது பதவிக்காலத்தின் போது, உத்தர பிரதேச மாநிலம் பெரெய்லி பகுதியில் உள்ள ரோஹில்கண்ட் மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய தாக குற்றச்சாட்டு எழுந்தது.
an
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலையீட்டின் பேரில், கடந்த 2009-ம் ஆண்டு லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது. . இந்த வழக்கில் அன்புமணி உட்பட 10 பேர் மீது டெில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.     முறை கேடு புகார் வழக்கை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
தன்  மீதான குற்றச்சாட்டுப் பிரிவுகளை மாற்றக் கோரி அன்புமணி மனு தாக்கல் செய்திருந்தார். இந்தமனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் தில்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க முடியாது, அந்நீதிமன்றம் விசாரணையை தொடராலம் என்றும் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

More articles

Latest article