ரூபாய் 2,999-க்கு 4ஜி மொபைல்கள். மலிவான டேட்டா திட்டங்கள், வரையற்ற இரவு நேர ஆக்ஸஸ், இலவச வாய்ஸ் கால்கள் என்று அதிரடி சலுகைகளை அறிவித்து தனது ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று முறைப்படி தனது கனவுத் திட்டமான ஜியோவைத் துவங்கி அதை பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு அர்பணித்து வைத்தார்.
rel-3
அப்போது அவர் பேசும்போது, இந்த புரட்சிகரமான திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் அகமகிழ்கிறேன் என்றும். இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்குள் வாய்ஸ் கால்கள் முழுக்க முழுக்க இலவசம் என்றும் அவர் தெரிவித்தார்.
தகவல் என்பது ஆக்ஸிஜன் போன்றது, அதை அனுபவிப்பது நமது உரிமை. இந்தியாவை தகவல் பற்றாக்குறையிலிருந்து தகவல் மிகு நாடாக மாற்றுவது தனது கனவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
rel-3
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அதிரடி சலுகைகள்:
  • இத்திட்டத்தின் வெல்கம் சலுகையின் படி ஆப்கள், 4ஜி சேவை ஆகியவை அனைவருக்கும் செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 31 2016 வரை முற்றிலும் இலவசம்.
  •  வாய்ஸ் கால்கள் முழுக்க முழுக்க இலவசம்
  • இந்தியாவுக்குள் ரோமிங்  முற்றிலும் இலவசம்
  • இணைய டேட்டாவைப் பொறுத்தவரை ஜியோவின் அடிப்படை கட்டணம் ஒரு ஜிபிக்கு வெறும் ரூ.50 ஆகும்.
  • மாணவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகை மற்றும் 25% கூடுதல் டேட்டா
  • 135 எம்பிபிஎஸ் மின்னல்வேக டவுன்லோட்
  • ரூபாய் 15,000 மதிப்புள்ள ஜியோ ஆப் புக்கிங் டிசம்பர் 31,2017 வரை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசம்.