எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்த விழாவில் ‘அய்யனார் வீதி’ பட டீசர் வெளியீடு!

Must read

எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்த விழாவில் ‘அய்யனார் வீதி’ பட டீசரை ராதாரவி வெளியிட நடிகர் ரித்திஷ் பெற்றுக் கொண்டார். அப்போது எம்ஜிஆரின் உறவினர் சுதா விஜயகுமார், இப்படத்தின் தயாரிப்பாளர்களான  P.செந்தில்வேல் மற்றும் விஜயசங்கர் ,இயக்குனர் ஜிப்ஸி N.ராஜ்குமார் ,சிறப்பு விருந்தினர்களாக ஆடிட்டர் ராஜா ,கபீர் ,சம்சுதீன் உட்பட பலர் இருந்தனர்.

ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்  ‘அய்யனார் வீதி’.

முக்கிய கதாபாத்திரத்தில்  K.பாக்கியராஜ், பொன்வண்ணன் நடிப்பில், கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் அறிமுகமாகிறார்கள். மேலும் சிங்கம்புலி, ராஜா, வின்சென்ட்ராய், செந்தில்வேல், விஜயசங்கர், தாஸ் பாண்டியன், முத்துக்காளை, மார்த்தாண்டம், கோட்டைப்பெருமாள் மற்றும் பலமுன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பாஸ்கரன் எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜிப்ஸி N.ராஜ்குமார்.

பழக்க வழக்கங்கள், நாகரீகம், பண்பாடு, கலை இலக்கியம், இவை எல்லாம் தமிழக வரலாற்றில் ஒன்றோடு ஒன்று மெல்லிய இழைகளாக பின்னிக் கிடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டினர் இந்தியாவை வியப்போடு பார்க்க துவங்கியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இன்னும் பண்பாட்டுச்  சுழல் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு  சில மாநிலங்களில் முக்கிய இடம் தமிழகத்திற்கு  தான் உண்டு.

அத்தகைய சூழல் மாறாமல், ஆபாசம்,  அசிங்கம், இரட்டைஅர்த்த வசனங்கள்.. புரையோடிப்போன வன்மங்கள் எதுவுமின்றி அன்பு…பாசம்… நட்பு…வீரம்…அளவான கோபம்…  இவை அனைத்தும் இன்னும் நம்மை  பாதுகாக்கும் கவசகுண்டலங்கள் என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவும், குடும்பத்தோடு திரைப்படம் பார்க்கும் ஆவலை துண்டும் வண்ணம்… இந்த படத்தின் கதைக்களம்  அமைக்கப்பட்டுள்ளதுதான் “அய்யனார் வீதி’ படத்தின் வெற்றிக்கான சூட்சமம்.

இப்படத்தில் மொத்தம் 5 பாடல்களை இசையமைப்பபாளர் U.K.முரளியின் இசையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, ராஜபாளையம், மேலுர்,  மேலப்பூங்குடி, குற்றாலம்,  கொடைக்கானல், சொக்கலிங்கபுரம்,  சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர் வெளியீடு சென்னையில் உள்ள எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்தது. எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது ‘அய்யனார் வீதி’ படத்தின் டீசரை நடிகர் ராதாரவி வெளியிட நடிகர் ரித்திஷ் பெற்றுக் கொண்டார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article