பெரம்பலூர்:

ந்திய ராணுவத்துக்கு இளைஞர்களை சேர்ப்பதற்கான, ஆள் சேர்ப்பு முகாம் இன்று திருச்சி அருகே உள்ள பெரம்பலூரில் தொடங்கியது.

இன்று முதல் 23ந்தேதி வரை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், நெல்லை உள்பட  15 மாவட்ட இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கி உள்ளது. இதையடுத்து,  தேர்வு நடைபெறும் இடத்தை திருச்சி மண்டல இயக்குநர் கர்னல் ரஜனீஷ் லால்,  ஆட்சியர் வே. சாந்தா ஆகியோர் முன்னேற்பாடுகளை பார்வையிட்டனர்.

ஏற்கனவே ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க 18ஆயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்து, அவர்களுக்கு அனுமதி சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய முகாமுக்கு சுமார் 1500 பேர் குவிந்துள்ளனர்.