டெல்லி:
பணமதிப்பிறக்க அறிவிப்பு பிறகு ஜன் தன் வங்கி கணக்குகளில் உள்ள பெடாசிட் தொகை 71,557 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது கறுப்பு பணம் தான் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் பிரதமர் மோடியின் அடுத்த இலக்காக இருக்கிறது. ஆனால், பணமதிப்பிறக்கம் மூலம் கறுப்பு பண முதலைகளை கண்டறிவதில் ஏற்பட்ட சிரமத்தை விட அதிக சிரமங்களை மத்திய அரசு சந்திக்க வேண்டியிருக்கும்.
 

ஏற்கனவே ஜன் தன் வங்கி கணக்குகளில் புழக்கத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை பண மே £சடி கும்பல் டெபாசிட் செய்துவிட்டனர். இவ்வாறு டெபாசிட் செய்த பணத்தின் உண்மையான உரிமைய £ளரை கண்டுபிடிப்பது தான் தற்போது பெரிய சவாலாக உள்ளது. 2 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான டெப £சிட்டுக்கு வரிவிதிப்பு இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, உரிய சன்மானத்தை பெற்றுக் கொண்டு பெரும்பாலான மக்கள் இந்த தொகையை ஜன் தன் கணக்குகளில் செலுத்தி விட்டனர்.
இவ்வாறு ஏழை மக்களின் கணக்குகளில் செலுத்தியது சட்டவிரோதம். இதை பினாமி பரிமாற்றமாக கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இதற்கு வங்கி நிர்வாகத்தில் வழி இல்லை என்று வரி வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிகாரத்தை பயன்படுத்தி இந்த டெபாசிட் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் டெபாசிட் செய்த பணம் கறுப்பா அல்லது வெள்ளையா என்பதை வங்கிகள் வேறுபடுத்தி பார்ப்பதறகான திறன் இல்லை என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பணமதிப்பிறக்க அறிவிப்பு வெளியான நவம்பர் 8ம் தேதி வரை ஜன் தன் வங்கி கணக்குகளில் இருந்த 45 ஆயிரத்து 636 கோடி டெபாசிட், தற்போது 71 ஆயிரத்து 557 கோடியாக உயர்ந்துள்ளது.
புதிய பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் அசையும், அசையாத சொத்துக்கள், உறுதியான, உறுதியற்ற மற்றும் உரிமை, சட்டப்பூர்வ ஆவணங்கள், தங்கம், நிதி பத்திரம் போன்றவை பினாமி பரிமாற்றத்தில் வருகிறது. மத்திய அரசு தன்னிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் பினாமி சொத்துக்களை அடையாளம் காண திட்டமிட்டுள்ளது.
வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள நகை, சொத்து பத்திரங்கள், பண பரிமாற்ற பத்திரங்கள் போன்றவற்றை ரெய்டு மூலம் கையகப்படுத்தும் திட்டமும் உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் ஆவணங்களை கொண்டு நாட்டை யார் இயக்குவது என்பதை கண்டறிய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய பினாமி சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட சொத்தை உரியவர் பெயருக்கு மாற்ற முடியாத நிலை ஏற்படும். இது ரியல் எஸ்டேட் தொழிலில் வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வரும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்..