சென்னை:
காவிரி பிரச்சினையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த் முடிவு எடுக்க இன்று மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ண அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது.
உச்சநீதி மன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசு மற்றும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசு மீதும் குற்றச்சாட்டுக்களை கூறிய எதிர்க்கட்சி தலைவர் கடந்த 1ந்தேதி அனைத்துக்கட்சி தலைவர்களை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து அன்றே போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காவிரி பிரச்சினை குறித்து ஆலோசிக்க இன்று மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
நேற்று முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள காவிரி மீட்பு பயணம் உள்பட பல்வேறு போராட்டக் களங்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.