சென்னை:

லங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று தமிழக முதல்வரும், அதிமுக துணைஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, ராஜ்யசபாவில், பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக ஆதரவால் வெற்றி பெற்று மசோதா நிறைவேறியது.

மசோதாவில், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவது குறித்து ஏதும் அறிவிக் கப்படாதது தமிழகஅரசியல் கட்சிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக திமுக உள்பட தமிழக எதிர்க்கட்சிகள் அதிமுகமீது குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொறடா உத்தரவின்படி தான் அதிமுக எம்பிக்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைபாடு, இதுகுறித்து பிரதமரிடம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளதாகவும், அதிமுக எம்.பி.க்களும் இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில்  வலியுறுத்தி உள்ளனர் என்றும் கூறினார்.

குடியுரிமை சட்டம் குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்தி விட்டது என்று கூறிய முதல்வர், குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த ம‌த‌த்தினருக்கும் பாதிப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த‌தை நம்பி ஈழத்தமிழர்கள் உயிர்நீத்தனர்  என்று கூறியவர்,  இலங்கை தமிழர்கள் குறித்துபேச திமுகவுக்கு தகுதி கிடையாது என்றும்,  இலங்கைத் தமிழகர்களுக்கு  நன்மை செய்ததுபோல் திமுக நாடகமாடு வதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் 13 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த திமுக, இலங்கைத்தமிழகர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தராதது ஏன் என்றும் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.